சிறையில் புத்தகங்களை வாசித்தார் ப.சிதம்பரம்

திகார் சிறையில் அடைக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், வெள்ளிக்கிழமை புத்தகங்களுடன் தனது நாளைத் தொடங்கினார்.
சிறையில் புத்தகங்களை வாசித்தார் ப.சிதம்பரம்


திகார் சிறையில் அடைக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், வெள்ளிக்கிழமை புத்தகங்களுடன் தனது நாளைத் தொடங்கினார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ப.சிதம்பரத்தை வரும் 19-ஆம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, வியாழக்கிழமை மாலை திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கென தனியறை ஒதுக்கப்பட்டது. வேறு எந்தவிதமான சிறப்பு சலுகைகளும் அவருக்கு அளிக்கப்படவில்லை.
சிறை எண் 7-இல் அவர் அடைக்கப்பட்டார். அமலாக்கத் துறை தாக்கல் செய்யும் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்படும் நபர்கள் பெரும்பாலானோர், இந்தச் சிறையில்அடைக்கப்படுவதே வழக்கம். ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தியும் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக இதே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையிலுள்ள நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தொலைக்காட்சி பார்க்கவும் ப.சிதம்பரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், சிறையில் வெள்ளிக்கிழமை காலை ப.சிதம்பரம் நடைப்பயிற்சி மேற்கொண்டார். காலை உணவாக தேநீரும், கஞ்சியும் அவருக்கு அளிக்கப்பட்டன. பின்னர், செய்தித்தாள்களை அவர் வாசித்தார். அதன் பிறகு, சமய இலக்கிய நூல்களை அவர் வாசித்தார். அவரது மகன் கார்த்தி சிதம்பரம் அவரை நேரில் சந்தித்துப் பேசினார் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com