நிச்சயம் இதற்கு குட் பை சொல்லியே ஆக வேண்டும்: மோடி வலியுறுத்தும் விஷயம் இது!

கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உலகமே இந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் குட்பை சொல்லிவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கிரேட்டர் நொய்டா: கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உலகமே இந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் குட்பை சொல்லிவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகமே, ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு குட் பை சொல்லும் நேரம் வந்து விட்டதாகவே நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

வனப்பரப்பை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி பேசிய மோடி, இந்தியா மட்டும் கடந்த 2015 முதல் 2017ம் ஆண்டு வரை சுமார் 0.8 மில்லியன் ஹெக்டேர் வனப்பரப்பை புதிதாக உருவாக்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார். ஒரு வளர்ச்சிப் பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டால், அதை விட அதிகப்படியான மரங்கள் நடப்படுவதை இந்தியா வழக்கமாக்கிக் கொண்டிருப்பதாகவும் கூறினார் மோடி.

இந்தியாவில் துப்புரவு மற்றும் நீர் மேலாண்மைக்கு தூய்மை இந்தியா திட்டம் எந்த அளவுக்கு பாடுபடுகிறது என்பதையும் மோடி விளக்கம் அளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com