சுடச்சுட

  

  காதலனுக்காக தனது வீட்டிலேயே 10 லட்சம் ரூபாயைத் திருடிய காதலி! எதற்காகத் தெரியுமா?

  By Muthumari  |   Published on : 09th September 2019 05:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  lovers

   

  தனது காதலருக்கு உதவுவதற்காக இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் இருந்து 10 லட்சம் ரூபாயைத் திருடிவிட்டு இருவரும் தலைமறிவாகியுள்ள சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. 

  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கண்டிவாளி என்ற பகுதியில் வசித்து வருபவர் ராதா குப்தா. இவரது காதலர் அமீர் நவுஷாத் கான். இருவரும் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் சந்தித்து பேசியுள்ளனர். இவர்களது நட்பு பின்னர் காதலாக மாற, இருவரும் சில மாதங்களாக பழகி வந்துள்ளனர். 

  இந்நிலையில், காதலர் தொழில் தொடங்குவதற்கு பணம் தேவைப்படவே, தனது காதலியிடம் பண உதவி கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ராதா குப்தா, தனது வீட்டில் இருந்தே 10 லட்சத்தை திருடிச் சென்றுள்ளார். பின்னர் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். 

  தகவலறிந்த பெண்ணின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். கடந்த 30ம் தேதி இந்த சம்பவம் நடந்த நிலையில், இருவரது மொபைல் போன்களை டிராக் செய்து வந்த போலீசாருக்கு நேற்று அவர்கள் இருக்கும் இடம் தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவருக்கும் ஒரு நாள் காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai