சுடச்சுட

  

  இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகஸ்ட் மாதம் கடும் வீழ்ச்சியை சந்தித்த வாகன விற்பனை

  By PTI  |   Published on : 09th September 2019 05:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vehicle


  பயணிகளுக்கான வாகன விற்பனை, கடந்த 1998ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் கடும் சரிவைக் கண்டுள்ளது.

  கார், இருசக்கர வாகனங்கள், பயணிகளுக்கான வாகனங்கள் என இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ஆட்டோமொபைல் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ளது என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி அமைப்பான எஸ்ஐஏஎம் தெரிவித்துள்ளது.

  1997-98ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் மொத்த வாகன விற்பனையில் கடுமையான சரிவைக் கண்டுள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

  மேலும் படிக்க:  மோட்டார் வாகன விற்பனையில் கடும் வீழ்ச்சி

  கடந்த ஆகஸ்ட் மாதம் வாகன விற்பனை 18,21,490 ஆக இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் வாகன விற்பனை 23,82,436 ஆக இருந்துள்ளது. இது வாகன விற்பனையில் 23.55 சதவீத வீழ்ச்சியைக் காட்டுகிறது.

  மேலும் படிக்க: பயணிகள் வாகன விற்பனை 7 சதவீதம் குறையும்: இக்ரா

  மேலும், கடந்த ஜூலை மாதம் மொத்த வாகன விற்பனை கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக சரிவடைந்து, 18,25,148 ஆக இருந்தது. இதே ஜூலை மாதம் 2018ம் ஆண்டு வாகன விற்பனை 22,45,223 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

  மேலும் படிக்க: மோட்டார் வாகன விற்பனையில் 19 ஆண்டுகள் காணாத பின்னடைவு

  இதேப்போல மோட்டார் சைக்கிள் விற்பனையும் கடந்த மாதம் 22.33 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு 12,07,005 வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 9,37,486 ஆகக் குறைந்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai