சமூக வலைத்தளப் பதிவுகளால் வேலை இழக்கும் அபாயத்தில் 40% இந்தியர்கள்! - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிடும் போது, சுமார் 40% இந்தியர்கள் வேலையை இழக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
சமூக வலைத்தளப் பதிவுகளால் வேலை இழக்கும் அபாயத்தில் 40% இந்தியர்கள்! - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிடும் போது, வேலையை இழக்கும் சூழ்நிலை உருவாகலாம் என சுமார் 40% இந்தியர்கள் கூறியதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

நவீன உலகில், சமூக வலைத்தளங்கள் மக்களை கட்டிப்போட்டுள்ளன. சந்தோஷம், துக்கம், வருத்தம், கோபம், சமூகப் பிரச்னைகள் குறித்த கருத்துகள் அனைத்தையும் நாம் அருகில் உள்ளவர்களிடம் சொல்கிறோமோ, இல்லையோ, சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது.  

சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் புகைப்படங்களுடன் கூடிய கணக்குகளை பெரும்பாலாக அனைவருமே உபயோகித்து வருகின்றனர். அதில் பதிவிடப்படும் தகவல்கள், கருத்துகளை வைத்து அவர் எப்படிப்பட்டவர்? என தெரிந்துகொள்ளும் அளவிற்கு நிலைமை வந்துவிட்டது./ 

அந்த வகையில், சமூக வலைத்தள பதிவுகளினால் தாங்கள் வேலையை இழக்கலாம் என்ற அச்சத்தில் 40% இந்தியர்கள் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'சிலர் போலியான கணக்குகளை வைத்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இது அவர்களின் நற்பெயர்களை சேதப்படுத்துவதற்கு வழிவகுக்கும். நீங்கள் இடும் பதிவினால் சிலர் பாதிக்கப்படலாம். எனவே உங்களது சமூக வலைதள கணக்கை சரியாக பயன்படுத்துங்கள். உங்களது தகவல்களை பாதுகாப்பை வைத்திருங்கள். இதனால் தவறானவர் கைகளில் உங்களது தகவல்கள் செல்லாமல் தவிர்க்கலாம்' என்று தனியார் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். 

21.4% இந்தியர்கள் தங்களது சமூக வலைதள பதிவுகளால் வேலை பாதிக்கும் என்ற மன உளைச்சலில் இருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 46.9% மக்கள் தனது தனிப்பட்ட சொந்த விபரங்கள் மற்றும் அலுவலக வேலைகளை தனித்தனியாக கவனித்துக் கொள்கின்றனர். சுமார் 25% பேருக்கு சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட விபரங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி? எனத் தெரியாத நிலையில் இருக்கின்றனர். 

இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என இந்த ஆய்வில் 1000 பேர் உட்படுத்தப்பட்ட நிலையில், இதில் 16 வயது முதல் 24 வயதுக்குட்பட்டோர் சமூக வலைத்தள பதிவுகள் தங்களது வாழ்க்கைக்கு பெரிதும் உதவுகின்றன என்று தெரிவித்துள்ளனர். இறுதியில் 40% பேர் சமூக வலைத்தளங்களில் இடப்படும் பதிவுகளால் வேலையை இழக்கும் சூழ்நிலை உருவாகலாம் என்று கூறுகின்றனர். 

போலியான கணக்குகள், ஒழுக்கமற்ற பதிவுகள், விரும்பத்தகாத பதிவுகள், மற்றவர்களை புண்படுத்தும்படியான கருத்துகள், பொது இடங்களில் தவறாக நடந்துகொள்வது என்பவை இதற்கு காரணங்களாகக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com