Enable Javscript for better performance
புற்றுநோய் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார் நடிகர் ரிஷி கபூர்- Dinamani

சுடச்சுட

    

    புற்றுநோய் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார் நடிகர் ரிஷி கபூர்

    By DIN  |   Published on : 11th September 2019 11:00 AM  |   அ+அ அ-   |    |  

    rishi-kapoor-neetu-kapoor

    மனைவி நீத்து கபூருடன் ரிஷி கபூர்.


    பிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் (67) அமெரிக்காவில் புற்றுநோய் சிகிச்சையை முடித்துக் கொண்டு, செவ்வாய்க்கிழமை மும்பைக்கு திரும்பினார்.
    முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் அவர் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அவருக்கு என்ன வகை புற்றுநோய் ஏற்பட்டது என்பது குறித்து தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், சிகிச்சையை முடித்துக் கொண்டு, அமெரிக்காவில் இருந்து மும்பை திரும்பினார். இது தொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில், 11 மாதங்கள் 11 நாள்களுக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பியுள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
    ரிஷி கபூருடன் அவரது மனைவியும், நடிகையுமான நீத்து கபூரும் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு ரிஷி கபூருக்கு சிகிச்சை மேற்கொண்டிருந்தபோது ஷாருக் கான், ஆலியா பட், ஆமிர் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அனுபம் கெர், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
    1970ஆம் ஆண்டு மேரா நாம் ஜோக்கர் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரிஷி கபூர், பாபி திரைப்படத்தில் டிம்பிள் கபாடியாவுடன் சேர்ந்து நடித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு கடந்த 2000ஆம் ஆண்டு வரை திரைத்துறையில் வெற்றிகளைக் குவித்தார். இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அவர் அறியப்படுகிறார். இப்போது பாலிவுட்டில் பிரபலமாக உள்ள ரன்பீர் கபூர், ரிஷி கபூரின் மகனாவார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai