சுடச்சுட

  

  வீட்டுக் காவலில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு! 

  By DIN  |   Published on : 11th September 2019 12:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  chandra_babu


  விஜயவாடா: தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

  ஒய்எஸ்ஆர் கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள், தாக்குதலுக்கு ஆளாவதைக் கண்டித்து இன்று சந்திரபாபு நாயுடு இல்லத்தில் இருந்து பேரணி நடைபெறுவதாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  அதுமட்டுமல்லாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களும், எம்எல்ஏக்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

  நரசரோபேட்டா, சட்டினபள்ளி, பல்நாடு, குரஜலா பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

  வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரபாபு நாயுடு இன்று காலை 8 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai