சிங்கப்பூர் துணை பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

சிங்கப்பூர் துணை பிரதமரும், அந்நாட்டின் நிதியமைச்சருமான ஹெங் ஸ்வீ கீட்டை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
சிங்கப்பூர் துணை பிரதமரும், அந்நாட்டின் நிதியமைச்சருமான ஹெங் ஸ்வீ கீட்டை  சந்தித்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர். உடன் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி.
சிங்கப்பூர் துணை பிரதமரும், அந்நாட்டின் நிதியமைச்சருமான ஹெங் ஸ்வீ கீட்டை  சந்தித்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர். உடன் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி.


சிங்கப்பூர் துணை பிரதமரும், அந்நாட்டின் நிதியமைச்சருமான ஹெங் ஸ்வீ கீட்டை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக ஹெங் ஸ்வீ கீட்டை அவர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், புதிய இந்தியா அளிக்கும் வாய்ப்புகளை அடிப்படையாக வைத்து, இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஹெங் ஸ்வீ கீட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது, விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரியும் உடனிருந்தார். இதையடுத்து, சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர் எங்க் இங்ஹென்னையும் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.
இந்தியாசிங்கப்பூர் தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி மாநாட்டிலும் அவர் கலந்துகொண்டார். அப்போது, பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டமைப்பில் (ஆர்சிஇபி) இணைவது தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். 10 தென்கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 16 நாடுகளை உள்ளடக்கிய ஆர்சிஇபி கூட்டமைப்பை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
இந்த நாடுகளிடையே வரிகளற்ற வர்த்தகம் நடைபெற வகைசெய்வதே இந்தக் கூட்டமைப்பின் முக்கிய நோக்கமாகும். இது தவிர, பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பு அளிக்கவும் இந்தக் கூட்டமைப்பு வழிவகை செய்யும்.
எனினும், இந்தக் கூட்டமைப்பில் இணைந்தால், சீனப் பொருள்கள் இந்திய சந்தைகளில் எளிதில் புகுந்துவிடும் ஆபத்து உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, கூட்டமைப்பில் இணைவது தொடர்பாக இந்தியா இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com