நியூஜெர்ஸி ஆளுநர் 13இல் இந்தியா வருகை

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாண ஆளுநர் பில் முர்பே ஒருவார கால பயணமாக வரும் வெள்ளிக்கிழமை (செப். 13) இந்தியாவுக்கு வருகிறார். அவரது மனைவி மற்றும் அந்த மாகாண அதிகாரிகள் குழுவினரும்
நியூஜெர்ஸி ஆளுநர் 13இல் இந்தியா வருகை


அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாண ஆளுநர் பில் முர்பே ஒருவார கால பயணமாக வரும் வெள்ளிக்கிழமை (செப். 13) இந்தியாவுக்கு வருகிறார். அவரது மனைவி மற்றும் அந்த மாகாண அதிகாரிகள் குழுவினரும் இந்தியாவுக்கு வருகின்றனர்.
இந்தியாநியூஜெர்ஸி இடையே வர்த்தக, பொருளாதார உறவை மேம்படுத்தும் நோக்கில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். தில்லி, ஹைதராபாத், மும்பை, ஆமதாபாத், காந்திநகர், ஆக்ரா ஆகிய நகரங்களுக்குச் செல்லும் அவர், அரசியல் தலைவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச இருக்கிறார். இது தவிர அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழலை பாதிக்காத எரிசக்தி, மருத்துவம், திரைப்படம், ஊடகம் மற்றும் உற்பத்தித் துறை வல்லுநர்களையும் அவர் சந்தித்துப் பேச இருக்கிறார். இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை மட்டுமன்றி கலாசாரம், இசை, கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்த நியூஜெர்ஸி விருப்பம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பில் முர்பே வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் வளர்ச்சியில் முக்கியமாக நியூஜெர்ஸி மாகாணத்தில் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்தியர்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர். இதனை மேலும் மேம்படுத்தும் வகையிலும், இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்புகளையும் அதிகரிக்கும் வகையிலும் எனது பயணம் அமையும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க மாகாணத்தின் ஆளுநர் ஒருவர் இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வமாக பொருளாதார ஒத்துழைப்புக்காக பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com