சுடச்சுட

  

  பணியாளர் தேர்வில் பாரபட்சம்: அமெரிக்காவில் இயங்கும் இந்திய நிறுவனம் மீது குற்றச்சாட்டு 

  By DIN  |   Published on : 12th September 2019 03:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பணியாளர் தேர்வில் பாரபட்சம் காட்டப்படுவதாக அமெரிக்காவில் இயங்கி வரும் இந்திய நிறுவனம் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
  பெங்களூரை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவில் இயங்கி வரும் ஹாப்பியஸ்ட் மைண்ட்ஸ் என்ற நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்கரான டாமி சுல்ஸ்பெர்க் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
  ஹாப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனம், தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கும், இந்தியாவைச் சேர்ந்த பணியாளர்களுக்கும் முன்னுரிமை வழங்குகிறது. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்கிறது. இந்தப் பாரபட்சம் காரணமாக, மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
  கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2018-ஆண்டு வரை 52 புதிய பணியாளர்களை அந்நிறுவனம் பணிக்கு அமர்த்தியுள்ளது. அதில், 29 பேர் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதற்காக, தேவையான நுழைவுஇசைவை (விசா) அந்நிறுவனம் முன்கூட்டியே பெற்றுக்கொள்கிறது. பின்னர், நுழைவுஇசைவு தயாராக இருக்கும் நபர்களைப் பணியில் சேர்த்துக்கொள்கிறது. 
  அவர்களைப் பணியில் இணைத்துக் கொள்வதற்காக, ஏற்கெனவே பணியில் இருக்கும் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களைப் பணியிலிருந்து நீக்கிவருகிறது. எனவே, பணியாளர் தேர்வில் பாரபட்சமற்ற நடைமுறையை அந்நிறுவனம் கடைப்பிடிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai