சுடச்சுட

  

  தரமான நல்ல சாலைகளால்தான் விபத்துகள் நேரிடுகின்றன: கண்டுபிடித்தவர் கர்நாடக துணை முதல்வர்

  By DIN  |   Published on : 12th September 2019 05:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  road


  பெங்களூரு: முதலில் சாலையைப் போடுங்கள், பிறகு அபராதத்தை வசூலிக்கலாம் என்று பொது மக்கள் சொல்லும் கருத்துக்கு கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோல் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

  கர்நாடக மாநிலத்தின் பொதுப் பணித் துறையை கவனித்து வரும் கர்ஜோலிடம், சாலை மற்றும் கட்டமைப்புகள் மோசமாக இருக்கும் நிலையில், சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத்தை மட்டும் அதிகரிப்பது ஏன் என்று கேள்வி முன் வைக்கப்பட்டது. அப்போது அவர் நல்ல தரமான சாலைகளால்தான் விபத்துகள் நேரிடுகின்றன என்று தடாலடியாக பதில் அளித்தார்.

  அதாவது, நல்ல சாலையோ, மோசமான சாலையோ எதுவாக இருந்தாலும் விபத்துகள் ஏற்படுவதற்கு வேறு காரணங்கள் உள்ளன. அதாவது தேசிய நெடுஞ்சாலைகளைப் பாருங்கள், அதில் வாகனங்கள் எல்லாம் 100 அல்லது 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கின்றன எனறும் தான் கூறிய கருத்துக்கான அர்த்தத்தை விளக்கினார்.

  மேலும், அதிக அபராதத் தொகை வசூலிப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை, அது பற்றி மாநில அரசு பரிசீலித்து வருவதாகவும் பதில் கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai