சுடச்சுட

  

  காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கு அழைப்பு: சோனியா நாளை சந்திப்பு

  By DIN  |   Published on : 12th September 2019 11:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Sonia_Gandhi_EPS


  காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி நாளை (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.  

  காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, சோனியா காந்தி இன்று முதன்முறையாக கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, அவர் நாளை காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களைச் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

  இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கையில், 

  "பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர்களை சோனியா காந்தி நாளை மாலை அவரது இல்லத்தில் வைத்து சந்திக்கிறார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மக்கள் பிரச்னையைத் தீர்த்து, வலிமையான நல்லாட்சியை வழங்க வேண்டும் என்பது சோனியா காந்தியின் நோக்கமாக இருக்கிறது. எனவே, அவர் இவர்களைச் சந்திக்கவுள்ளதாக தெரிகிறது. 

  மேலும், அந்தந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை எப்படி பலப்படுத்துவது என்பது குறித்தும் அவர் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்" என்றனர். 

  முன்னதாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள்,  பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர்கள் உள்ளிட்டோருடனான கூட்டத்தில், "நாம் ஆட்சியில் இருக்கும் பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நமக்கு கூடுதல் பொறுப்புணர்வு இருக்கிறது. பொறுப்பு மிக்க, வெளிப்படைத்தன்மையுடைய நல்லாட்சிக்கு உதாரணமாக இந்த மாநிலங்கள் திகழ வேண்டும். தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளை நிறைவேற்ற செயல்பட வேண்டும். இல்லையெனில் அதன் விளைவாக கட்சி மக்கள் ஆதரவை இழக்க நேரிடும்" என்றார்.

  மேலும் படிக்க: அபாயகரமான நிலையில் இந்தியப் பொருளாதாரம்: மன்மோகன் சிங் எச்சரிக்கை

  17-வது மக்களவைத் தேர்தலின் தோல்விக்குப் பிறகு ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார். இதன்பிறகு, சோனியா காந்தியே கட்சியின் இடைக்காலத் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். 

  இரண்டு பொதுத் தேர்தலில் மோசமான தோல்வி, கட்சி உறுப்பினர்கள் கட்சி தாவுவது, உறுப்பினர்கள்/தலைவர்கள் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது என பல்வேறு சவால்கள் அவருக்கு உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai