சுடச்சுட

  

  கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் சிறை வைக்கப்பட்ட ஆடுகள்: செய்த குற்றம் இதுதான்!

  By ENS  |   Published on : 12th September 2019 01:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Goats_police

  காவல்நிலையத்தில் ஆடுகள்


  இரண்டு ஆடுகளை காவல்துறையினர் கைது செய்து நேற்று இரவு முழுவதும் காவல்நிலையத்தில் கட்டி வைத்திருந்தனர். அவற்றின் மீது என்ன வழக்குப் பதிவானது என்று தெரிந்து கொள்ள ஆர்வமா?

  வாருங்கள், தெலங்கானாவில் மரம் வளர்ப்பு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ஹரிதா ஹரம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ் நடப்பட்ட செடிகளை தின்றதாக இந்த ஆடுகள் மீது புகார் கொடுத்துள்ளது ஹசுராபாத் முனிசிபாலிடி.

  ஹரிதா ஹரம் திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரக் கன்றுகளை ஆடு மாடுகள் மேய்ந்து விடுவதால் அதிருப்தியில் இருந்த சமூக அமைப்பு ஒன்று, அவ்வாறு மரக்கன்றுகளை மேய்ந்து கொண்டிருந்த இரண்டு ஆடுகளை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளது.

  நேற்று இரவு முழுவதும் காவல்நிலையத்திலேயே அந்த ஆடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன.  அதன் உரிமையாளர் காவல்நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டார். அவருக்கு ரூ.1000 அபராதமாக விதிக்கப்பட்டு, காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai