நாரதா ரகசிய விசாரணை வழக்கு: சிபிஐ குரல் மாதிரி பரிசோதனை

நாரதா ரகசிய விசாரணை தொடர்பாக, கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சாட்டர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. அபரூபா போத்தார் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை குரல் மாதிரி
நாரதா ரகசிய விசாரணை வழக்கு: சிபிஐ குரல் மாதிரி பரிசோதனை


நாரதா ரகசிய விசாரணை தொடர்பாக, கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சாட்டர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. அபரூபா போத்தார் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை குரல் மாதிரி பரிசோதனை நடத்தினர்.
கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சாட்டர்ஜி, அண்மையில் பாஜகவில் இணைந்தார். இவருக்கும், ஆராம்பக் மக்களவைத் தொகுதி எம்.பி. அபரூபா உள்ளிட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் 10 பேருக்கும் குரல் மாதிரி பரிசோதனைக்காக, சிபிஐ அழைப்பாணை அனுப்பியிருந்தது. அதன்படி, சாட்டர்ஜி மற்றும் அபரூபாவிடம் புதன்கிழமை குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.
சுப்ரதா முகர்ஜி, செளகதா ராய், மதன் மித்ரா உள்ளிட்ட திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் கடந்த 2 வாரங்களாக சிபிஐ அதிகாரிகள் குரல் மாதிரி பரிசோதனை நடத்தினர்.
மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன், நாரதா நியூஸ் என்ற இணையதளம் சில விடியோக்களை வெளியிட்டது. அதில், ஒரு நிறுவனம் ஆதாயம் அடைவதற்காக, அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் லஞ்சம் வாங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் காட்சிகளுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில், விடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்காக, சிபிஐ அதிகாரிகள் குரல் மாதிரி பரிசோதனையை நடத்தினர்.
முன்னதாக, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அபரூபா கடந்த 2017-ஆம் ஆண்டு மனுவொன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், அந்த விடியோ படம்பிடிக்கப்பட்ட சமயத்தில், தாம் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அவரது மனு, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com