பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கேப்டன் நிதீஷ்குமார்

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கேப்டன் முதல்வர் நிதீஷ்குமார்தான் என்றும் அவர் நான்கு, ஆறு ரன்களை தொடர்ச்சியாக விளாசி எதிரிககளைத் தோற்கடித்து வருவதாகவும் துணை முதல்வர் சுஷீல்குமார் மோடி
பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கேப்டன் நிதீஷ்குமார்


பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கேப்டன் முதல்வர் நிதீஷ்குமார்தான் என்றும் அவர் நான்கு, ஆறு ரன்களை தொடர்ச்சியாக விளாசி எதிரிககளைத் தோற்கடித்து வருவதாகவும் துணை முதல்வர் சுஷீல்குமார் மோடி பாராட்டியுள்ளார்.

பிகார் மாநிலத்தில் நிதீஷ்குமார் தலைமையிலான கூட்டணி அரசில் ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜகவும் இடம்பெற்றுள்ளது. பாஜகவைச் சேர்ந்த எம்எல்சியான சஞ்சய் பாஸ்வான் அண்மையில் கருத்து கூறுகையில், நிதீஷ்குமார் ஏற்கெனவே மூன்று முறை முதல்வராகப் பதவி வகித்து விட்டார். நான்காவது முறையாக முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு பதில் அவர் தேசிய அரசியலுக்கு இடம்பெயர வேண்டும். மாநில முதல்வர் வேட்பாளர்களாக துணை முதல்வர் சுஷீல்குமார் மோடி, அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சரான நித்யானந்த் ராய் ஆகியோரின் பெயர்களைப் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்திருந்தார். 

சஞ்சய் பாஸ்வானின் இந்தக் கருத்து ஐக்கிய ஜனதா தளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சஞ்சய் பாஸ்வாகன் போன்றவர்களை அடக்கி வைக்குமாறு பாஜக மேலிடத்தை நிதீஷ்குமார் வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து, சஞ்சய் பாஸ்வான் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று பாஜக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்தவரான துணை முதல்வர் சுஷீல்குமார் மோடி, சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நிதீஷ்குமார்தான் பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கேப்டன். அவர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலிலும் கேப்டனாக நீடிப்பார். நிதீஷ்குமார் ஆறு மற்றும் நான்கு ரன்களை தொடர்ச்சியாக அடித்து எதிரிகளைத் தோற்கடித்து வருகிறார். எனவே, கேப்டனை மாற்றும் பேச்சு எங்கிருந்து எழுந்தது? என்று சுஷீல்குமார் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, சுஷீல்குமார் மோடி கடந்த ஜூலை மாதம் பிகார் சட்டப் பேரவையில் பேசும்போது, அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலை நிதீஷ்குமார் தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி சந்திக்கும் என்று கூறியிருந்தாôர். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடு தழுவிய செல்வாக்கைப் பெற்றுள்ள பாஜக, பிகாரில் ஆளும் கூட்டணியில் முதலாவது இடத்தைக் கோரும் என்று யூகங்களை மறுக்கும் வகையில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

இதனிடையே, சஞ்சய் பாஸ்வானின் கருத்தை தாங்கள் ஏற்கவில்லை என்று மாநில பாஜகவும் கூறியது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த், சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், பிகாரின் வளர்ச்சிக்காக நிதீஷ்குமார் தலைமையில் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகியவற்றுடனான எங்கள் கூட்டணி என்பது மூன்று கட்சிகளின் மத்திய தலைமை எடுத்த கூட்டு முடிவாகும். 
பாஜக தனது கூட்டணிக் கட்சிகளையும் அவற்றின் தலைவர்களையும் மதிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com