லடாக் அருகே  இந்திய - சீன ராணுவம் மோதல்

ஜம்மு-காஷ்மீரை அடுத்த லடாக் அருகே எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே புதன்கிழமை திடீர் மோதல் போக்கு ஏற்பட்டது. 
லடாக் அருகே  இந்திய - சீன ராணுவம் மோதல்


ஜம்மு-காஷ்மீரை அடுத்த லடாக் அருகே எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே புதன்கிழமை திடீர் மோதல் போக்கு ஏற்பட்டது. 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்த பிறகு இந்தியா, சீனா இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டிருந்தது. இந்தச் சூழலில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள பாங்கோங் ஏரியைச் சுற்றியிருக்கும் பல பகுதிகளுக்கு இந்தியாவும், சீனாவும் உரிமை கோரி வருகின்றன. இந்நிலையில், பாங்கோங் ஏரி அருகே புதன்கிழமை காலையில் இந்திய ராணுவத்தினர் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்ட சீன ராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறும்படி கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்து, இந்திய எல்லைக்குள்பட்ட பகுதியிலேயே தாங்கள் இருப்பதாக, இந்திய ராணுவத்தினர் கூறினர். மேலும், வெகுநேரம் அங்கேயே நடமாடிக் கொண்டிருந்தனர். இதனால்,  இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், இரு தரப்பினரும் தங்கள் முகாம்களுக்குத் திரும்பிச் சென்றனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், அடுத்த மாதம் 10, 11, 12-ஆம் தேதிகளில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசவுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையில் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு, லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் குடில்கள் அமைத்ததற்கு இந்திய ராணுவத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்புக்கும் இடையே போர்ப்பதற்றம் நீடித்தது. ஓராண்டுக்குப் பிறகு இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே தற்போது மோதல் போக்கு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com