சுடச்சுட

  


  ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே- 47 ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை  கைப்பற்றப்பட்டன.
  இதுதொடர்பாக ஜம்மு காவல் துறை ஐஜி மகேஷ் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  ஜம்மு-காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக ரகசியத் தகவல்கள் கிடைத்ததையடுத்து, கதுவா மாவட்டத்தில் உள்ள ஜம்மு-பதான்கோட் நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் வியாழக்கிழமை காலை சோதனை செய்தனர். அப்போது அந்த வழியே வந்த லாரி ஒன்றும் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த வாகனத்தை சோதனையிட்டதில், அதில் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கிகள், ஏகே-56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும், வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டன. அதையடுத்து அந்த வாகனத்தில் இருந்த 3 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 11, 000 ரொக்கத் தொகையும் கைப்பற்றப்பட்டது.
  அவர்கள் மூவரும் காஷ்மீரைச் சேர்ந்த உபாயத்-உல்-இஸ்லாம், ஜஹாங்கீர் அகமது, சபீல் அகமது ஆகியோர் என்பதும், பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. 
  காஷ்மீரில் அமைதியை குலைப்பதற்காக, பஞ்சாபில் இருந்து காஷ்மீருக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களை கடத்தியுள்ளனர். காஷ்மீரில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு தாக்குதலை நடத்துவதற்கு இந்த ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
  பஞ்சாப் மாநிலத்தின் பம்யால் பகுதியில் இருந்து காஷ்மீர் நோக்கி அந்த லாரி சென்று கொண்டிருந்தது. பம்யால் சர்வதேச எல்லையருகே ஊடுருவி இந்தியாவுக்குள் அவர்கள் நுழைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக பஞ்சாப் காவல் துறையினரும் இணைந்துள்ளனர் என்று கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai