சுடச்சுட

  

  டி.கே.சிவகுமார் மகளிடம் 7 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை

  By DIN  |   Published on : 13th September 2019 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  aish1


  கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு எதிரான கருப்புப் பண மோசடி வழக்கு தொடர்பாக, அவரது மகள் ஐஸ்வர்யாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். 
  இதுதொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: 
  டி.கே.சிவகுமாருக்கு சொந்தமான கல்வி அறக்கட்டளையின் அறங்காவலராக இருக்கும் ஐஸ்வர்யா, காலை 10.30 மணியளவில் விசாரணைக்காக ஆஜரானார். இரவு 7.30 மணிக்கு விசாரணை முடிந்து அவர் அமலாக்கத் துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். 
  கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவரது வாக்குமூலம் பதியப்பட்டது.  கடந்த 2017-ஆம் ஆண்டு சிவகுமாரும், ஐஸ்வர்யாவும் சிங்கப்பூர் சென்றது தொடர்பாக முன்பு சிவகுமாரிடம் விசாரணை நடத்தியிருந்தோம்.  அப்போது அவர் அளித்த வாக்குமூலம், சமர்ப்பித்த ஆவணங்கள் தொடர்பாக ஐஸ்வர்யாவிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டது. 
  மேலும், ஐஸ்வர்யா தனது தரப்பிலிருந்து தனிப்பட்ட நிதிநிலை அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார். சிவகுமாரால் தொடங்கப்பட்டு, ஐஸ்வர்யா அறங்காவலராக இருக்கும் கல்வி அறக்கட்டளையின் கீழ் பல கல்லூரிகள் இயங்குகின்றன. அந்த அறக்கட்டளையின் சொத்து மற்றும் வர்த்தக மதிப்பு கோடிகளில் உள்ளது என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறினர். 
  கருப்புப் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ள டி.கே.சிவகுமார், தற்போது அந்த அமைப்பின் காவலில் இருக்கிறார். 9 நாள் அமலாக்கத் துறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் அவர் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்படுகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai