சுடச்சுட

    

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அரசிடம் சிறப்பு உத்தி: வி.கே.சிங் தகவல்

    By DIN  |   Published on : 13th September 2019 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vk-sing


    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு சிறப்பு உத்தியை வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
    அவர் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது அவரிடம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடவடிக்கை எடுக்க முப்படைகளும் தயார் என்றும், ஆனால் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசுதான் என்றும் ராணுவத் தலைமை தளபதி விபின் ராவத் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
    அதற்குப் பதிலளித்து வி.கே.சிங் கூறுகையில் இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாகப் பேச முடியாது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக அரசு சிறப்பு உத்தியை வைத்துள்ளது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai