சுடச்சுட

  

  புவியீர்ப்பு விசையை கண்டறிந்தவர் ஐன்ஸ்டீன்?: அமைச்சர் பேச்சால் சர்ச்சை

  By DIN  |   Published on : 13th September 2019 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  puys


  பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன், புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்ததாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வாய்தவறிக் கூறியது  சமூக வலைதளங்களில் கிண்டலாக விமர்சிக்கப்பட்டது. 
  விஞ்ஞானி நியூட்டன்தான் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் என்பதே சரியான தகவலாகும். இந்நிலையில், தில்லியில் வர்த்தக வாரியத்தின் இரண்டாவது கூட்டத்தில் பியூஷ் கோயல் பேசும்போது, நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து குறிப்பிட்டார். தொலைக்காட்சிகளில் பொருளாதாரம் பற்றி காண்பிக்கப்படும் மதிப்பீடுகளைக் கண்டு குழம்ப வேண்டாம். ரூ.350 கோடி பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க வேண்டுமானால் 12 சதவீத வளர்ச்சியைக் காண வேண்டும். ஆனால் தற்போது பொருளாதாரம் 6 முதல் 7 சதவீதம் அளவுக்கே வளர்கிறது. இந்தக் கணக்குகளின் உள்ளே போக வேண்டாம். இதுபோன்ற கணக்குகள் புவியீர்ப்பு விசை தத்துவத்தைக் கண்டுபிடிப்பதில் ஐன்ஸ்டீனுக்கு உதவி விடவில்லை என்று அவர் தெரிவித்தார்.
  பியூஷ் கோயல் வாய்தவறி இவ்வாறு கூறியதை சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்தனர். இது தொடர்பாக காங்கிரஸ் தனது அதிகாரபூர்வ சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவிக்கையில், முன்னாள் நிதியமைச்சரும் இந்நாள் வர்த்தக அமைச்சருமான பியூஷ் கோயல் கூறியது சரிதான். புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு கணிதம் தேவைப்படவில்லை. 
  நியூட்டனுக்குதான் அது தேவைப்பட்டது என்று கேலியாகக் கூறியிருந்தது.
  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இது தொடர்பாகக் கருத்து தெரிவிக்கையில் பொருளாதாரக் கணக்கு மோசமாக இருப்பதை உணர மத்திய அரசு தன் தலையில் ஆப்பிள் பழம் விழ வேண்டும் என்று காத்திருக்க வேண்டிய அவசியல்லை. தொலைதூரக் கனவுகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக எதார்த்த நிலை மீது அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai