சுடச்சுட

  

  பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து அக்.15 முதல் நாடு தழுவிய போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

  By DIN  |   Published on : 13th September 2019 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மத்திய அரசின் பொருளாதாரகக் கொள்கைகளைக் கண்டித்து  நாடு தழுவிய போராட்டத்தை அக்டோபர் 15 முதல் 25ஆம்  தேதி வரை நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
  மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் விமரிசையாக கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
  அப்போது, நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து மக்களிடம் எடுத்துக் கூறுவதற்காக மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளின் மாநாட்டை நாடு முழுவதும் வரும் 20-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.என்.சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
  பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திட்ட மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து அக்டோபர் 15 முதல் 25-ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
  மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி,  அக்டோபர் 2 முதல் 9-ஆம் தேதி வரை பாதயாத்திரைகளும் நடத்தப்படும். கட்சியின் உறுப்பினர் சேர்ப்பு நடவடிக்கையும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்று ஆர்.பி.என்.சிங் தெரிவித்தார்.
  இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலும் உடன் இருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai