உத்தரகண்டிலும் போக்குவரத்து விதிமீறல் அபராதம் குறைப்பு

உத்தரகண்டிலும் போக்குவரத்து விதிமீறல் அபராதம் குறைப்பு

குஜராத், கர்நாடகத்தைத் தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலத்திலும் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் குறைக்கப்பட்டுள்ளது.


குஜராத், கர்நாடகத்தைத் தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலத்திலும் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் குறைக்கப்பட்டுள்ளது.
அபராதக் குறைப்பால் எழும் விளைவுகளுக்கு அந்தந்த மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டுமென்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் வாகனச் சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களுக்கு நாடாளுமன்றம் கடந்த ஜூலை மாதம் ஒப்புதல் அளித்தது. புதிய சட்டத் திருத்தத்தின்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பலமடங்கு உயர்த்தப்பட்டது. புதிய சட்டத் திருத்தங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட காலஅவகாசம் அளிக்க வேண்டுமென சில மாநிலங்கள் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தன. 
இருந்தபோதிலும், கடந்த 1-ஆம் தேதி முதல் இந்தச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தது. இதில் ஒடிசாவில் லாரி ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.86,500 அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பான ரசீது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அபராதத்தைக் குறைப்பது குறித்து மாநில அரசுகள் பரிசீலித்தன. 
இதில் முதல் மாநிலமாக குஜராத் அரசு, அபராதத் தொகைகளை பாதியளவுக்கு குறைத்தது. 
இதைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் குறைக்கப்பட்டன.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநில அமைச்சரவைக் கூட்டத்திலும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களைக் குறைப்பது என்று வியாழக்கிழமை முடிவெடுக்கப்பட்டது. இதன்படி செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கினால் விதிக்கப்படும் அபராதம் ரூ.5000-இல் இருந்து ரூ.2,500 ஆகவும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கினால் அபராதம் ரூ.5,000 என்பதை, ரூ.2,500 ஆகவும், ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் இருந்தால் அபராதம் ரூ.10,000 என்பது ரூ.5,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, உத்தரப் பிரதேச அரசும் அபராதத்தை குறைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com