காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: முஸ்லிம் அமைப்பு தீர்மானம்

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி; தேசத்துடன் ஒருங்கிணைந்து இருக்கும்போதுதான் காஷ்மீர் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று இந்தியாவில் உள்ள முதன்மையான முஸ்லிம் அமைப்பான ஜாமிய


காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி; தேசத்துடன் ஒருங்கிணைந்து இருக்கும்போதுதான் காஷ்மீர் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று இந்தியாவில் உள்ள முதன்மையான முஸ்லிம் அமைப்பான ஜாமியத் உலேமா -ஏ-ஹிந்த் அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அந்த அமைப்பின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் காஷ்மீர் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. இந்தியாவுடன் ஒருமைப்பாட்டுடன் இருக்கும்போதுதான் காஷ்மீர் மக்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும். அதே நேரத்தில் காஷ்மீர் மக்களின் சுயகெளரவம் பாதுகாக்கப்பட வேண்டும். தங்கள் கலாசாரத்தை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு. தேச ஒற்றுமை என்பது மிகவும் முக்கியமானது. அதற்கு எதிராகச் செயல்படும் பிரிவினைவாத அமைப்புகளுக்கு ஒருபோதும் ஆதரவு அளிக்கக் கூடாது. இதுபோன்ற பிரிவினை அமைப்புகள் இந்தியாவுக்கு மட்டுல்ல, காஷ்மீர் மக்களுக்கும் பெரும் பிரச்னையாகவே உள்ளன.
அண்டை நாட்டில் (பாகிஸ்தான்) உள்ள தீயசக்திகள், காஷ்மீர் மக்களைக் கொண்டே அந்தப் பிராந்தியத்தில் அழிவை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு நாட்டு மக்கள் யாரும் துணைபோகக் கூடாது என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும் அந்த அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com