காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு

காஷ்மீர் பள்ளத் தாக்கில் கடைகளும், வர்த்தக வளாகங்களும் தொடர்ந்து 39-ஆவது நாளாக வியாழக்கிழமையும் மூடப்பட்டிருந்ததால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருந்தது. பள்ளிகளும்
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் தலைமைச் செயலகம் பகுதியருகே வியாழக்கிழமை காணப்பட்ட போக்குவரத்து.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் தலைமைச் செயலகம் பகுதியருகே வியாழக்கிழமை காணப்பட்ட போக்குவரத்து.

காஷ்மீர் பள்ளத் தாக்கில் கடைகளும், வர்த்தக வளாகங்களும் தொடர்ந்து 39-ஆவது நாளாக வியாழக்கிழமையும் மூடப்பட்டிருந்ததால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருந்தது. பள்ளிகளும் மூடப்பட்டிருந்ததுடன், பொதுப் போக்குவரத்து வாகனங்களும் சாலைகளில் இயங்கவில்லை. 
இதுதொடர்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: 
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியின் பெரும்பாலான இடங்களில் மக்கள் கூடுவதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனினும், சட்டம்-ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைப்பதற்காக பாதுகாப்புப் படையினர் ஆங்காங்கே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
செல்லிடப்பேசி அழைப்பு சேவைகள் மீதான கட்டுப்பாடுகளை மட்டும் தளர்த்துவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதுமாக தரைவழி தொலைபேசி சேவை மீண்டும் செயல்பாட்டு வந்துவிட்ட நிலையில், வடக்கு காஷ்மீரின் குப்வாரா மற்றும் ஹந்த்வாரா காவல் மாவட்டங்களில் மட்டும் செல்லிடப்பேசி அழைப்பு சேவைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. 
எனினும், இணையதளச் சேவைகள் மீதான தடை அனைத்துப் பகுதிகளிலும் தொடர்கிறது. ஸ்ரீநகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை தனியார் வாகனப் போக்குவரத்து அதிகமாகக் காணப்பட்டது. எனினும், பள்ளத்தாக்குப் பகுதியில் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் இயங்கவில்லை. கடைகளும், சந்தைகளும், வர்த்தக வளாகங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது என்று அதிகாரிகள் கூறினர். 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. மேலும், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  அப்போது முதல் அங்கு அமலில் இருந்து வரும் கட்டுப்பாடுகள், சூழ்நிலை மேம்படுவதன் அடிப்படையில் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com