Enable Javscript for better performance
செப்.20இல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரிகள் குறைப்பது குறித்து ஆலோசனை?- Dinamani

சுடச்சுட

    

    செப்.20இல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரிகள் குறைப்பது குறித்து ஆலோசனை?

    By DIN  |   Published on : 14th September 2019 03:25 AM  |   அ+அ அ-   |    |  


    ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், கோவாவில் இம்மாதம் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.
    இதுகுறித்து மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கோவாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
    கார்கள் முதல் பிஸ்கட் வரை ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
    வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டால், முதலில் ஆய்வு செய்து பின்னர் முடிவு செய்யப்படும்.
    2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை இழப்பீடு ஈடுசெய்யப்படுவதற்கான வரி ரூ.1,98,963 கோடி திரட்டப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.1,75,572 கோடி அளிக்கப்பட்டது.
    இன்னும் ரூ.23,391 கோடி நிலுவையில் உள்ளது. இதை மனதில் வைத்துதான் மாநில அரசுகள் வரிகுறைப்பு தொடர்பானகோரிக்கையை முன்வைக்கும் என்று என்று அந்த அதிகாரி 
    தெரிவித்தார்.
     

    kattana sevai