நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்று மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்


புது தில்லி: நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்று மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதார சூழல் குறித்து புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில், நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது, நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதையேக் காட்டுகிறது.

பொருளாதார சூழல் மீண்டு வருவதற்கான சீரான அறிகுறிகள் தென்படுகின்றன. தொழிற்சாலைகளில் உற்பதி அதிகரித்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பின் பயன், மக்களுக்கு சென்றடையும் வகையில் வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

பொதுத் துறை வங்கித் தலைவர்களை செப்டம்பர் 19ம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன்.

5 முக்கிய துறைகளில் பொருட்களின் நுகர்வு குறைந்துவிட்டது. பகுதி கடன் உறுதித் திட்டம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய சலுகைகள் அறிவிக்கப்பட உள்ளன. நாட்டில் வரி செலுத்தும் முறை மிகவும் எளிமையாக்கப்படும். சிறிய அளவில் வரி செலுத்துவோர் செய்யும் தவறுகளுக்காக பெரிய அளவில் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com