பயங்கரவாதத்தைக் கைவிடவில்லையெனில் பாகிஸ்தான் நொறுங்கிவிடும்: அமைச்சர் ராஜ்நாத் சிங்

"பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால், அந்த நாடு பல துண்டுகளாக சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ள
பயங்கரவாதத்தைக் கைவிடவில்லையெனில் பாகிஸ்தான் நொறுங்கிவிடும்: அமைச்சர் ராஜ்நாத் சிங்

"பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால், அந்த நாடு பல துண்டுகளாக சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.
குஜராத் மாநிலம், சூரத்தில், பணியின்போது வீரமரணமடைந்த 122 ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை கெளரவிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது:
பாகிஸ்தானியர் யாரும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் செல்ல வேண்டாம் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில், இந்திய எல்லைக்குள் நுழையும் பாகிஸ்தானியர்களை திரும்பிச் செல்வதற்கு இந்திய ராணுவத்தினர் விடமாட்டார்கள்.
ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை இந்திய அரசு நீக்கியதை பாகிஸ்தானால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால், ஐ.நா.விடம் முறையிட்டுப் பார்த்தது. ஆனால், பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை நம்புவதற்கு ஐ.நா. தயாராக இல்லை.
சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியாவில் சிறுபான்மையினரின் மக்கள்தொகை அதிகரித்துள்ளது. அதேவேளையில், பாகிஸ்தானில் சீக்கியர்கள், பெளத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தார்கள்; பாதுகாப்பாக இருக்கிறார்கள்; பாதுகாப்பாக இருப்பார்கள். மக்களை ஜாதி, மத அடிப்படையில் இந்தியா பிரிக்கவில்லை.
பாகிஸ்தானை பிளவுபடுத்த யாரும் தேவையில்லை; அது தானாகவே சிறு துண்டுகளாக சிதறி விடும். பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அந்த நாடு சிறு துண்டுகளாக சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், எல்லையில் வீரமரணமடைந்த 122 வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2.5 லட்சத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். அந்தத் தொகை, மாருதி வீர் ஜவான் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com