காஷ்மீரில் 10% மொபைல் போன்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன - மத்திய அரசு தகவல்!

ஜம்மு காஷ்மீரில் 10% மொபைல் போன்கள் மட்டுமே செயல்பாட்டில் இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பில் ஈடுபட்ட போலீஸார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பில் ஈடுபட்ட போலீஸார்.

ஜம்மு காஷ்மீரில் 10% மொபைல் போன்கள் செயல்பாட்டில் இருப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்த்தில் தகவல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் 100% லேண்ட்லைன் நெட்ஒர்க் செயல்பாட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அன்றைய தினம் முதல் காஷ்மீரில் அனைத்துப் பகுதிகளிலும் நெட்ஒர்க் சேவை துண்டிக்கப்பட்டது.

ஒரு மாதத்திற்கு மேலாகியும், காஷ்மீரில் மொபைல் நெட்ஒர்க் சேவை வழங்காததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, மத்திய அரசு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் காஷ்மீரில் மீண்டும் நெட்ஒர்க் சேவையை வழங்குவதற்கான பணிகள்  நடைபெற்று வருவதாகவும்,  ஜம்மு காஷ்மீரில் 10% மொபைல் போன்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும், அதே நேரத்தில் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் பி.எஸ்.என்.எல் லேண்ட்லைன் நெட்ஒர்க் 100% செயல்பாட்டில் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

ஆனால், மொபைல் மற்றும் லேண்ட்லைன் சேவை மட்டுமின்றி பேருந்து சேவைகள் கூட இங்கு பல பகுதிகளில் இல்லை என காஷ்மீர் மக்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com