கர்நாடக முதல்வர் எடியூரப்பா
கர்நாடக முதல்வர் எடியூரப்பா

கன்னட மொழிக்கான முக்கியத்துவத்தில் ஒருபோதும் சமரசம் கிடையாது: அமித் ஷாவுக்கு எடியூரப்பா தரும் இடையூறு 

கன்னட மொழிக்கான முக்கியத்துவத்தில் ஒருபோதும் சமரசம் கிடையாது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு சங்கடம் உண்டாக்கும் வகையில், சொந்தக் கட்சியைச் சேர்ந்த  கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்து..

பெங்களூரு: கன்னட மொழிக்கான முக்கியத்துவத்தில் ஒருபோதும் சமரசம் கிடையாது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு சங்கடம் உண்டாக்கும் வகையில், சொந்தக் கட்சியைச் சேர்ந்த  கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷா ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்’ என்று கூறியிருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு எதிராக இரண்டாவது மொழிப் போராட்டம் நடத்தப்படும் என்று தீவிரமாக விமர்சித்திருந்தார்.

அதேசமயம் நாடு குடியரசான போது அரசு செய்து கொடுத்த சத்தியத்தை எந்த 'ஷா’வோ மாற்ற முயற்சிக்க கூடாது என்று மத்திய பாஜக அரசை மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றின் மூலம் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் கன்னட மொழிக்கான முக்கியத்துவத்தில் ஒருபோதும் சமரசம் கிடையாது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு சங்கடம் உண்டாக்கும் வகையில், சொந்தக் கட்சியைச் சேர்ந்த  கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்களன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளும் நாட்டில் சமமானவையே. கர்நாடகாவை பொறுத்தவரை கன்னட மொழிக்கு தரப்படும் முக்கியத்துவத்தில் ஒருபோதும் சமரசம் கிடையாது. கன்னட மொழி, கலாசாரத்தை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com