இந்தியா-சிங்கப்பூர்-தாய்லாந்து கடற்படைகள் கூட்டுப் பயிற்சி தொடக்கம்

இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளின் கடற்படை பங்கேற்கும் முத்தரப்பு கூட்டுப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. இம்மூன்று நாடுகளும் இத்தகைய முத்தரப்பு பயிற்சியில் பங்கேற்பது இது முதல் முறையாகும். 
போர்ட் பிளேர் துறைமுகத்தில் கூட்டுப் பயிற்சிக்காக திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்த 'ஆர்எஸ்எஸ் டெனேஷியஸ்' தாக்குதல் கப்பல்.

இதுதொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

முத்தரப்பு கடற்படையின் கூட்டுப் பயிற்சி, அந்தமான்-நிகோபர் தீவுகளில் உள்ள போர்ட் பிளேர் நகரில் திங்கள்கிழமை தொடங்கியது. இந்தப் பயிற்சி, கடற்பகுதி, கரைப் பகுதி என இரு கட்டங்களாக நடைபெறுகிறது.  கரைப் பகுதி பயிற்சி போர்ட் பிளேர் துறைமுகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. இது செவ்வாய்கிழமை நிறைவடையும். கடற்பகுதி பயிற்சி செப்.18 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும். இந்தப் பயிற்சியின் மூலம் மூன்று நாடுகளின் கடற்படையும் பரஸ்பரம் தங்கள் அனுபவங்களைப் பகிர்வது மூலம் புதிய உத்திகளை கற்றுக்கொள்ள இயலும். 

சிங்கப்பூர் கடற்படையின் "ஆர்எஸ்எஸ் டெனேஷியஸ்' சிறுரக தாக்குதல் கப்பல், தாய்லாந்து கடற்படையின் "ஹெச்டிஎம்ஸ் கிராபுரி' போர்க் கப்பல், இந்திய கடற்படையின் "ரண்வீர்', "கோரா' போர்க் கப்பல்கள், "சுகன்யா' ரோந்துக் கப்பல் ஆகியவை இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ராணுவங்கள் கூட்டுப் பயிற்சி:   இந்தியா-தாய்லாந்து ராணுவம் இடையேயான இருதரப்பு கூட்டுப் பயிற்சி மேகாலய மாநிலம், உம்ரோய் பகுதியில் திங்கள்கிழமை தொடங்கியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

இந்தக் கூட்டுப் பயிற்சி 14 நாள்கள் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com