எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: 4 வீரர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 4 இந்திய ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: 4 வீரர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 4 இந்திய ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தார் செக்டார் அருகே உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் அத்துமீறி தாக்குதல் நடத்தத் தொடங்கினர். சிறிய ரக ஆயுதங்கள், மோட்டார் குண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு கடுமையாகத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி தரப்பட்டது. சில மணி நேரம்  நீடித்த இந்த மோதலில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் 4 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் கூறினர்.
பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி,  இந்த ஆண்டு மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை எல்லையில் அத்துமீறியதாக இந்திய வெளியுறவுத் துறை செயலர் ரவீஷ் குமார் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதிநிதிகளை பலமுறை அழைத்து கண்டனம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய பகுதிகளில் சனிக்கிழமை காலை பாகிஸ்தான் ராணுத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்
தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com