ஒடிஸா: முதலையிடம் இருந்து சாதுர்யமாக தப்பிய விவசாயி

ஒடிஸா மாநிலம், கேந்திரபாரா மாவட்டத்தில் முதலையிடம் சிக்கிக் கொண்ட விவசாயி ஒருவர், தனது சாதுர்யத்தால் உயிர் தப்பினார்.

ஒடிஸா மாநிலம், கேந்திரபாரா மாவட்டத்தில் முதலையிடம் சிக்கிக் கொண்ட விவசாயி ஒருவர், தனது சாதுர்யத்தால் உயிர் தப்பினார்.

இதுதொடர்பாக அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

கேந்திரபாரா மாவட்டத்தின் ஜலகானா கிராமத்தைச் சேர்ந்தவர் பஜகிருஷ்ணா பிரதான் (58). அந்த கிராமத்தில் உள்ள சிற்றோடையில் அவர் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, தண்ணீருக்குள் இருந்து திடீரென வெளியே வந்த முதலை அவரை கவ்விப் பிடித்தது.  அதைக் கண்டு முதலில் அதிர்ச்சியடைந்த அவர், பிறகு சாதுரியமாக அருகில் இருந்த மூங்கில் தடியை எடுத்து முதலையின் கண்ணைக் குறி வைத்து தாக்கினார். இதையடுத்து முதலை, அவரை விடுவித்து விட்டு மீண்டும் நீருக்குள் சென்றது. அந்த விவசாயிக்கு வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறினர்.

இந்த அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என்றும், சாவை கண்முன்னே கண்டதாகவும் அந்த விவசாயி தெரிவித்தார்.

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "அந்த சிற்றோடையை ஒட்டியுள்ள பகுதியில் 10-க்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதால், அந்த நீர்நிலைகளுக்கு மக்கள் செல்வதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com