விநோத குறைபாடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேருக்கும் 12-க்கும் மேற்பட்ட விரல்கள்!

மத்தியப்பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேருக்கும் 12-க்கும் மேற்பட்ட விரல்கள் உள்ள விநோத குறைபாடு காணப்படுகிறது. 
விநோத குறைபாடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேருக்கும் 12-க்கும் மேற்பட்ட விரல்கள்!

மத்தியப்பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேருக்கும் 12-க்கும் மேற்பட்ட விரல்கள் உள்ள விநோத குறைபாடு காணப்படுகிறது. சராசரி மனிதனுக்கு கையிலும், காலிலும் சேர்த்து மொத்தம் 20 விரல்கள் மட்டுமே காணப்படும். மிகவும் அரிதாக ஒருசிலருக்கு ஒன்று அல்லது இரண்டு விரல்கள் கை அல்லது காலில் கூடுதலாக இருக்கும்.

ஆனால், பாலிடேக்டைல் எனும் விநோத குறைபாடு கொண்ட இக்குடும்பத்தைச் சேர்ந்த 25 பேருக்கும் 12-க்கும் மேற்பட்ட விரல்கள் காணப்படுகிறது. இதுதொடர்பாக அந்த குடும்பத்தைச் சேர்ந்த பாலதேவ் யாவாலே கூறுகையில்,

எங்களுக்கு உள்ள இந்த விநோத குறைபாடு காரணமாக எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கை மற்றும் காலில் சேர்த்து 12 முதல் 14 விரல்களை வரை உள்ளது. எனது குழந்தைகள் பள்ளியில் கேலி, கிண்டலுக்கு ஆளாகின்றனர். இதனால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. சாதாரண செருப்புகளைப் பயன்படுத்த எங்களால் இயலாது. 

நான் 10-ஆம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன். ஒருமுறை ராணுவத் தேர்வுக்குச் சென்றபோது இந்த குறைபாடு காரணமாக உடல்தகுதித் தேர்வில் தோல்வியடைந்துவிட்டேன். மேலும் எங்களுக்கு வேலை கிடைப்பதிலும் மிகுந்த சிரமம் உள்ளது. 

மிகவும் ஏழ்மையான எங்கள் குடும்பத்துக்கு சொந்தமாக நிலம் கூட கிடையாது. கிராமப் பஞ்சாயத்தும் எங்கள் குடும்பத்துக்கு உதவ மறுக்கிறது. எனவே அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என்று உருக்கத்துடன் கோரிக்கை வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com