ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என நான் கூறவில்லை: அமித் ஷா விளக்கம் 

நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று தான் கூறவில்லை என மத்திய உள்துறை அமித் ஷா விளக்கமளித்துள்ளார். 
உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா


நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று தான் கூறவில்லை என மத்திய உள்துறை அமித் ஷா விளக்கமளித்துள்ளார். 

அண்மையில் ஹிந்தி தினத்தன்று, இந்தியாவை ஒருங்கிணைக்கவும், சர்வதேச அளவில் இந்தியாவை அடையாளப்படுத்தவும் நாட்டின் பொதுவான மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று அமித் ஷா கூறியிருந்தார். இந்த கருத்து நாடு முழுவதும் மிகப் பெரிய சர்ச்சையாக உதித்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கண்டனங்களைப் பதிவு செய்தனர். குறிப்பாக, தமிழக அரசியல் தலைவர்கள் தங்களது எதிர்ப்புகளை கடுமையாக வெளிப்படுத்தினர். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் கர்நாடகாவில் கன்னடம்தான் முதன்மையான மொழி என்றார். 

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று தான் கூறவில்லை என விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து, ஹிந்தி நாளிதழ் ஹிந்துஸ்தான் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, 

"நானும் ஹிந்தி பேசாத மாநிலங்களில் இருந்துதான் வந்துள்ளேன். குஜராத்தி பேசும் குஜராத்தில் இருந்து வந்துள்ளேன். என்னுடைய உரையை முழுமையாகக் கேட்க வேண்டும். யாரேனும் அரசியல் செய்ய வேண்டும் என்றால், அது அவர்களுடைய விருப்பம். ஒரு குழந்தை தனது தாய்மொழியில் கல்வியைப் பயின்றால்தான் சிறப்பாக செயல்பட முடியும். மேலும், தாய்மொழியில் பயின்றால்தான் அந்தக் குழந்தை உளவியல் ரீதியாக மேம்பட முடியும்.

தாய்மொழி என்றால் அது ஹிந்தி அல்ல. என்னுடைய மாநிலத்தில் எப்படி குஜராத்தியோ, அதுபோல அந்தந்த மாநிலத்தில் உள்ள மொழிதான் அம்மாநிலத்தின் தாய்மொழி. ஆனால், நாட்டில் யாரேனும் மற்றொரு மொழியைப் படிக்க விரும்பினால் அது ஒரு மொழியாகத்தான் இருக்க வேண்டும். அது ஹிந்தியாகத்தான் இருக்க வேண்டும். நான் ஒரு கோரிக்கையைத்தான் வைத்துள்ளேன். இதில் என்ன தவறு உள்ளது என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com