கர்நாடகத்தில் டிஆர்டிஓ-வின் ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது

கர்நாடகத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு (டிஆர்டிஓ) சொந்தமான ஆளில்லா விமானம் சோதனை முயற்சியின்போது கீழே விழுந்து நொறுங்கியது.


கர்நாடகத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு (டிஆர்டிஓ) சொந்தமான ஆளில்லா விமானம் சோதனை முயற்சியின்போது கீழே விழுந்து நொறுங்கியது.
சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஜோடி சில்லெனஹல்லி என்ற கிராமத்தில் விவசாய நிலத்தில் அந்த ஆளில்லா விமானம் செவ்வாய்க்கிழமை விழுந்து நொறுங்கியது.
அப்போது, மிகப் பெரிய சப்தம் கேட்டது. இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அந்தப் பகுதியில் ஒன்று கூடினர்.
இதுகுறித்து சித்ரதுர்கா மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் கே.அருண் கூறுகையில், இந்த விபத்தால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றார்.
டிஆர்டிஓ சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், தங்களது நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்ட ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. 
எனினும், ரஸ்டோம்-2 என்ற ஆளில்லா விமானத்தை பரிசோதனை செய்தபோது அது விழுந்து நொறுங்கியதாக கர்நாடக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com