ராணுவத் தலைமை தளபதி விபின் ராவத் லே பகுதியில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லே பகுதியில் ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத் ஆய்வு செய்தார்.


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லே பகுதியில் ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஃபயர் அன்ட் ஃப்யூரி (14ஆவது) கார்ப்ஸ் தலைமையகத்துக்கு விபின் ராவத் செவ்வாய்க்கிழமை வந்தார்.  அங்கு, லெஃப்டினன்ட் ஜெனரல் ரண்பீர் சிங், வடக்கு பிராந்திய லெஃப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே. ஜோஷி ஆகியோருடன் அவர் கலந்துரையாடினார்.
ராணுவ வசதிகளை மேம்படுத்துவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக லடாக் சென்றுள்ள 15ஆவது நிதிக் குழுத் தலைவர் என்.கே.சிங் மற்றும் அக்குழுவின் உறுப்பினர்கள் ஆகியோரும் லே பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர்.
ஃபயர் அன்ட் ஃப்யூரி (14ஆவது) கார்ப்ஸ் தலைமையகத்தில் விபின் ராவத்தும், என்.கே.சிங்கும் கலந்துரையாடினர். எல்லைப் பகுதிகளுக்கு தொடர்பை ஏற்படுத்தியதால், கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பகுதிகளில் வீரர்களைக் குவிக்க முடிகிறது என்பதை என்.கே.சிங்கிடம் விபின் ராவத் எடுத்துரைத்தார்.
நாட்டுக்காக வெகு தூரத்தில் கடுமையான இயற்கை சூழலை எதிர்கொண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுக்கு நிதிக் குழு பாராட்டு தெரிவித்தது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
44-ஆவது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு: காஷ்மீர் பள்ளத்தாக்கில் 44-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. பள்ளிகளை மீண்டும் திறக்கலாம் என மாநில நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. எனினும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்கின்றனர். தொலைபேசி இணைப்புகள் மீண்டும் அளிக்கப்பட்டுவிட்டன. செல்லிடப்பேசி, இணையச் சேவை ஆகியவை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். 
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீர் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com