
வாராணசி மற்றும் அலாகாபாத் ஆகிய நகரங்களில் பாய்ந்தோடும் கங்கை, யமுனை ஆகிய நதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்தந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த மாநில அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த சில தினங்களாக அலாகாபாத் மற்றும் வாராணசியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கங்கை, யமுனை நதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீரின் அளவு அதிகரிப்பை தொடர்ந்து கண்காணிக்குமாறும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
பலியா நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.