மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு

அஸ்ஸாம் மாநில தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான விவகாரம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்துப் பேசினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு


புது தில்லி: அஸ்ஸாம் மாநில தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான விவகாரம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்துப் பேசினார்.

புது தில்லி நார்த் பிளாக் அலுவலகத்தில் இன்று அமித் ஷாவை சந்தித்துப் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, செய்தியாளர்களிடம் பேசுகையில், அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து உண்மையான இந்திய குடிமக்கள் கூட நீக்கப்பட்டுள்ளனர். அதில் ஏராளமான பெங்காளி, ஹிந்தி, கோர்காஸ் மொழி பேசும் மக்களும் அடங்குவர். அவ்வளவு ஏன், ஏராளமான அஸ்ஸாமி மக்களும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தின் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பேசுவதற்காக இங்கு வரவில்லை, அஸ்ஸாம் மாநில தேசிய குடிமக்கள் பதிவேறு பற்றிப் பேசவே வந்தேன் என்றும் அவர் கூறினார்.

இதே விஷயம் குறித்து நேற்று பிரதமர் நரேந்திர மோடியையும் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com