கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது: நிர்மலா சீதாராமனுக்கு மோடி பாராட்டு

உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது: நிர்மலா சீதாராமனுக்கு மோடி பாராட்டு


புது தில்லி: உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியைக் குறைத்தது உள்ளிட்ட சில முக்கிய வரி குறைப்பு அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.

இதற்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி டீவீட் செய்துள்ளார்.

அந்த டிவிட்டர் பதிவில், உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி குறைப்பு என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும். மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் வரி குறைப்பு செய்திருப்பதன் மூலம் முதலீடுகளை ஈர்க்கவும், வேலை வாய்ப்புகளை பெருக்கவும் முடியும். 

நிதித்துறையின் அண்மைக்கால நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தவும், 130 கோடி இந்தியர்களின் மனங்களை வெல்லவும் முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com