நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை: பிரகாஷ் ஜாவடேகர்

பொருளாதாரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, தில்லியிலுள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம்
நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை: பிரகாஷ் ஜாவடேகர்

பொருளாதாரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தில்லியிலுள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொருளாதாரத்தின் அடிப்படைக் கட்டமைப்புகள் வலிமையுடன் உள்ளன. பொருளாதாரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வங்கி சாரா நிதி நிறுவனங்களில் சில பிரச்னைகள் காணப்படுகின்றன. அவற்றைத் தீர்க்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.
இதையடுத்து, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் வேளையில், அமெரிக்காவில் மோடி நலமா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பது குறித்து காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து வருவது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜாவடேகர், இந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இதுபோன்ற புகழ் காங்கிரஸுக்கு என்றுமே கிடைத்ததில்லை; இனிமேல் கிடைக்கப் போவதுமில்லை. பொறாமையின் காரணமாகவே இதுபோன்ற கருத்துகளை காங்கிரஸ் தெரிவித்து வருகிறது என்றார்.
காவி உடையணிந்தவர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதாக பாஜக மூத்த தலைவர் சின்மயானந்தைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கருத்து தெரிவித்தது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜாவடேகர், காங்கிரஸ் கட்சி கூட அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவரது கருத்து குறித்து நாங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. பல ஆண்டுகளாகவே இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் தெரிவித்து வருகிறார் என்றார்.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com