பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு மன்மோகன் சிங் தயாராக இருந்தார்: பிரிட்டன் முன்னாள் பிரதமர் கேமரூன் தகவல்

மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு நடத்திய தாக்குதல் போல் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு மன்மோகன் சிங் தயாராக இருந்தார்: பிரிட்டன் முன்னாள் பிரதமர் கேமரூன் தகவல்


மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு நடத்திய தாக்குதல் போல் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தயாராக இருந்தார் என்று பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமராக கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு பதவி வகித்த டேவிட் கேமரூன் தனது பணிஅனுபவங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை ஃபார் தி ரெக்கார்ட் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அப்புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
பிரதமர் மன்மோகன் சிங் துறவி போன்றவர். எனினும், இந்தியா எதிர்கொண்ட அச்சுறுத்தல்களுக்கு மிகவும் உத்வேகத்துடன் அவர் செயல்பட்டார். மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2008-ஆம் ஆண்டு நடத்திய தாக்குதல் போல் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக 2011-ஆம் ஆண்டு அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்.
பிரிட்டனுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு வருகை தந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியை விம்ப்ளி அரங்கத்தில் ஆரத் தழுவி வாழ்த்து தெரிவித்தது சிறப்பானது. இந்தியாவில் நான் மேற்கொண்ட பயணங்கள் அனைத்தும் சிறப்பானதாக அமைந்தன. தில்லியில் ஆட்டோவில் பயணித்ததும், மழை பெய்து கொண்டிருந்த வேளையில் மும்பையிலுள்ள குடிசைப் பகுதிகளில் நடந்து சென்றதும் நினைவை விட்டு நீங்காதவை. 
பிரிட்டன் பிரதமராக இருந்த எவரும் பஞ்சாபின் அமிருதசரஸில் உள்ள பொற்கொவிலுக்குள் சென்றதில்லை. அந்த நிலையை மாற்ற
நினைத்தேன். அதற்கு பிரிட்டனிலுள்ள இந்திய சமூகத்தினரும் ஊக்கமளித்தனர். 2013-ஆம் ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது, பொற்கோவிலுக்குள் சென்று, 1919-ஆம் ஆண்டு பிரிட்டன் ராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு மன்னிப்பு கோரினேன். இந்தப் படுகொலை தொடர்பாக, அங்குள்ள நினைவுப் புத்தகத்தில் பிரிட்டனின் வரலாற்றில் மிகவும் வெட்கப்படும்படியான சம்பவம் என்று குறிப்பிட்டேன். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் என்று அந்தப் புத்தகத்தில் கேமரூன் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com