வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

பொருளாதார சுணக்கம் மேலும் தொடர்ந்தால், வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

பொருளாதார சுணக்கம் மேலும் தொடர்ந்தால், வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, தொடர்ந்து 4 முறை வங்கி வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது மீண்டும் அதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்பிஐ ஆளுநர் கூறியிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற புளூம்பர்க் இந்தியா செய்தி நிறுவனத்தின் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது: நாட்டின் பொருளாதார வளர்ச்சி, விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பது ஆகியவற்றை கவனத்தில் கொண்டே நிதிக்கொள்கை வகுக்கப்படுகிறது.  இதில், விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பது சாத்தியமாகியுள்ளது.  பணவீக்கம் தொடர்ந்து 4 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.

ஆனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் யாருமே எதிர்பாராத வகையில் குறைந்து வருகிறது. இதனை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். பொருளாதார சுணக்கம் தொடர்ந்தால் வங்கி வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அனைவருக்கும் எளிதாக பணம் கிடைக்கச் செய்வதன் மூலம், அதாவது பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இப்போதைய நிலையைச் சமாளித்துவிட முடியும். இதற்காக பட்ஜெட்டில் அறிவித்த செலவுகளை மத்திய அரசு மேற்கொள்ளலாம். சிக்கன நடவடிக்கை, வரி அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு இப்போதைக்கு மேற்கொள்ளக் கூடாது. அடிப்படைக் கட்டமைப்புரீதியாக நமது பொருளாதாரம் வலுவாக உள்ளது. சர்வதேச அளவில் இப்போது பெரிய அளவில் பொருளாதார சுணக்கமில்லை. எனவே, நமது பொருளாதாரம் தற்காலிக சுணக்கத்தில் இருந்து மீளும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com