உலான்பாதரில் புத்தர் சிலை : பிரதமர் மோடி, மங்கோலிய அதிபர் கூட்டாக திறந்து வைப்பு

மங்கோலியாவின் தலைநகர் உலான்பாதரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையை அந்நாட்டு அதிபர் கல்த்மாஜின் பதுல்காவும், பிரதமர் நரேந்திர மோடியும் தில்லியில் இருந்தபடி காணொலி வழியாக வெள்ளிக்கிழமை திறந்து
புத்தர் சிலையை, பெளத்த துறவி முன்னிலையில், தில்லியில் இருந்து காணொலி வழியாக கூட்டாகத் திறந்து வைத்த நிகழ்ச்சியில்அந்நாட்டு அதிபர் கல்த்மாஜின் பதுல்கா, பிரதமர் நரேந்திர மோடி.
புத்தர் சிலையை, பெளத்த துறவி முன்னிலையில், தில்லியில் இருந்து காணொலி வழியாக கூட்டாகத் திறந்து வைத்த நிகழ்ச்சியில்அந்நாட்டு அதிபர் கல்த்மாஜின் பதுல்கா, பிரதமர் நரேந்திர மோடி.


மங்கோலியாவின் தலைநகர் உலான்பாதரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையை அந்நாட்டு அதிபர் கல்த்மாஜின் பதுல்காவும், பிரதமர் நரேந்திர மோடியும் தில்லியில் இருந்தபடி காணொலி வழியாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர்.
ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மங்கோலிய அதிபர் கல்த்மாஜின் பதுல்கா, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் லோக் கல்யாண் மார்கில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, மங்கோலியத் தலைநகர் உலான்பாதரில் உள்ள கண்டன் பெளத்த மடத்தில், சீடர்களுடன் கூடிய புத்தர் சிலையை அவர்கள் இருவரும் காணொலி வழியாக கூட்டாகத் திறந்து வைத்தனர். அதைத் தொடர்ந்து, பிரதமரின் இல்லத்தில் தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட கையில் கிண்ணம் வைத்திருக்கும் சிறிய அளவிலான புத்தர் சிலையையும் அவர்கள் திறந்து வைத்தனர். 
இந்த இரு நிகழ்வுகளும், இந்தியா- மங்கோலியா இடையேயான ஆன்மிக பந்தத்தின் அடையாளமாகவும், பெளத்த மதத்தின் பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்வதாகவும் அமைந்துள்ளது என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மங்கோலியாவில் உள்ள கண்டன் பெளத்த மடத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2015-ஆம் ஆண்டு சென்றார். அப்போது, போதி மரக்கன்றை அவர் பரிசளித்தார். இந்திய மக்களின் நட்பின் அடையாளமாக இந்த மரக்கன்று பரிசளிக்கப்படுவதாக அவர் கூறியிருந்தார்.
அந்த மடத்துக்கு புத்தர் சிலை ஒன்று பரிசளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார். அது, இந்திய, மங்கோலிய மக்களுக்கு இடையேயான நாகரிகம் மற்றும் பாரம்பரிய தொடர்புகளை பறைசாற்றும் விதமாக இருக்கும் என்று மோடி கூறியிருந்தார். அதன்படி, மங்கோலியாவில் உள்ள கண்டன் பெளத்த மடத்தில் புத்தர் சிலை திறக்கப்பட்டுள்ளது.
மங்கோலியாவின் மிக முக்கியமானதும், மிகப்பெரியதுமான கண்டன் மடாலயம், 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்டது. கம்யூனிஸ ஆட்சிக் காலத்திலும் இங்கு மடாலயத்தில் ஆன்மிகச்சேவைகள் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com