மஹாராஷ்டிரம், ஹரியாணா பேரவைத் தேர்தல் மற்றும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

தில்லியில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு சனிக்கிழமை (செப்.21) மதியம் நடைபெற்றது. 
மஹாராஷ்டிரம், ஹரியாணா பேரவைத் தேர்தல் மற்றும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

தில்லியில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு சனிக்கிழமை (செப்.21) மதியம் நடைபெற்றது. அப்போது, மஹாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டன.

செய்தியாளர் சந்திப்பின் போது தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்ததாவது,

ஹரியாணா மாநில பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 2-ஆம் தேதியுடனும், மஹாராஷ்டிர மாநில பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 9-ஆம் தேதியுடனும் நிறைவடைகிறது. ஹரியாணாவில் 1.82 கோடி பதிவுபெற்ற வாக்காளர்களும், மஹாராஷ்டிரத்தில் 8.94 கோடி பதிவுபெற்ற வாக்காளர்களும் உள்ளனர். மஹாராஷ்டிரத்தில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளும், ஹரியாணாவில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன.

மஹாராஷ்டிரத்தில் இடதுசாரி நக்ஸல் பயங்கரவாதம் அதிகம் உள்ள கட்சிரோலி மற்றும் கோண்டியா ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய போதிய நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளன. அரசியல் பிரசாரங்களின் போது நெகிழிப் பயன்பாட்டை தவிர்க்குமாறு அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

மஹாராஷ்டிரா மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்கும் அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும். அதுபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும். 

அதுமட்டுமல்லாமல் அருணாச்சலப்பிரதேசம், பிகார், சத்தீஸ்கர், அஸ்ஸாம், குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகம், கேரளா, மத்தியப்பிரதேசம், மேகாலயா, ஒடிஸா, புதுச்சேரி, ராஜஸ்தான், சிக்கிம், தெலங்கானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் காலிய உள்ள பேரவைத் தொகுதிகளுக்கும் அக்.21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும்.

வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com