ஆந்திரத்தில் 2 பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறையினருடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் இருவர் பெண்களாவர்.
ஆந்திரத்தில் 2 பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறையினருடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் இருவர் பெண்களாவர்.
இதுதொடர்பாக, விசாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாபுஜி அட்டடா கூறியதாவது:
மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் "மாவோயிஸ்ட் வாரம்' அனுசரிக்கப்பட்டு வருவதையொட்டி, விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆந்திர-ஒடிஸா எல்லைப் பகுதியில் காவல்துறையின் நக்ஸல் தடுப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சீலேரு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், மாவோயிஸ்டுகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. இதில், 2 பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்றார் அவர்.
வெடிபொருள்கள் பறிமுதல்: சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டத்தில் நக்ஸல்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடிபொருள்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் லால் உமேத் சிங் கூறியதாவது:
தாரேகான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வனப்பகுதியில் நக்ஸல்கள் வெடிபொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 3 பெரிய பிளாஸ்டிக் பெட்டகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில், பட்டாசு வெடிகுண்டுகள், டெட்டனேட்டர்கள், மின்சார ஒயர்கள், 13 பிரஷர் குக்கர்கள் உள்ளிட்டவை இருந்தன. பட்டாசு வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி, சக்திவாய்ந்த வெடிகுண்டை தயாரிக்க முடியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com