பெரு நிறுவன வரி குறைப்பால் முதலீடுகள் அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

உள்நாட்டு நிறுவனங்களுக்கான பெரு நிறுவன வரியை (கார்பரேட் வரி) மத்திய அரசு குறைத்துள்ளதால் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும்; வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் புதிய ஆலைகளைத் தொடங்கும் என்று
பெரு நிறுவன வரி குறைப்பால் முதலீடுகள் அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

உள்நாட்டு நிறுவனங்களுக்கான பெரு நிறுவன வரியை (கார்பரேட் வரி) மத்திய அரசு குறைத்துள்ளதால் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும்; வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் புதிய ஆலைகளைத் தொடங்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, பெரு நிறுவன வரியை 25.17 சதவீதமாகக் குறைப்பதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இது சுமார் 10 சதவீத வரிக் குறைப்பாகும்; இந்த வரிக் குறைப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மூலம் பொருளாதாரத்துக்கு பெரும் உத்வேகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
பெரு நிறுவன வரி அதிகமாக இருந்தது, அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் முன்பு பிரச்னையாக இருந்தது. இப்போது, அந்த வரி குறைக்கப்பட்டதை அடுத்து, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. உலகின் முதன்மையான அதிதிறன்பேசி தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனமும் இந்தியாவில் ஆலைகளைத் தொடங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் என்ற குறைந்த அளவிலான வரி இல்லை. ஆனால், நாம்தான் இப்போது அளித்துள்ளோம். சீனாவுடன் ஒப்பிடும்போது குறைவான வரி, வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவற்றில் இந்தியாவே சிறப்பாக உள்ளது. கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாம், பெரு நிறுவன வரியைக் குறைத்துள்ளோம்.
பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை மக்களுக்கு பயன் கிடைக்கும் வகையில் முழுமையாக செலவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 14.5 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6,000 வழங்கும் வருவாய் உறுதித் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்துமாறு வேளாண் துறை அமைச்சகத்திடம் கூறப்பட்டுள்ளது. நாட்டில் பணப் புழக்கத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் தனியார் நிறுவன உயரதிகாரிகளையும் சந்தித்துப் பேச இருக்கிறேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com