காஷ்மீரில் பொதுமக்களைச் சந்தித்தார் குலாம் நபி ஆஸாத்

மூன்று நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத், அனந்த்நாக் மாவட்டத்தில் அரசு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் பொதுமக்களைச் சந்தித்தார்.
காஷ்மீரில் பொதுமக்களைச் சந்தித்தார் குலாம் நபி ஆஸாத்

மூன்று நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத், அனந்த்நாக் மாவட்டத்தில் அரசு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் பொதுமக்களைச் சந்தித்தார்.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பிறகு அங்கு செல்ல குலாம் நபி ஆஸாத் மூன்று முறை முயற்சித்தார். எனினும், அவர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து தில்லிக்கே திருப்பி அனுப்பப்பட்டார். அதன் பின் தம்மை காஷ்மீர் செல்ல அனுமதிக்குமாறு கோரி ஆஸாத் தொடந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, குலாம் நபி ஆஸாத், காஷ்மீர் செல்ல கடந்த திங்கள்கிழமை அனுமதி வழங்கியது.
இதையடுத்து, ஆஸாத், ஸ்ரீநகருக்கு கடந்த வெள்ளிக்கிழமை  வந்து சேர்ந்தார். அவர் இங்குள்ள டாக் பங்களாவில் பொதுமக்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். எனினும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியது:
ஸ்ரீநகரில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் ஆஸாத் சனிக்கிழமை பகல் 11 மணி முதல் 3 மணி வரை தங்கியிருந்தார். அவரைச் சந்திக்க பலரும் வந்தனர். தனது காஷ்மீர் பயணம் தொடர்பாக ஆஸாத் உச்சநீதிமன்ற உத்தரவை சரியாகப் பின்பற்றிவந்தபோதிலும், அரசு பல்வேறு தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
அவர் ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க மக்களை பாதுகாப்புப் படையினர் அனுமதிக்கவில்லை என்றார் அவர்.
இதனிடையே, லல்லா டேட் மகப்பேறு மருத்துவமனைக்குச் சென்ற ஆஸாத், அங்குள்ளவர்களிடம் நலம் விசாரித்தார். மேலும் சுற்றுலா வரவேற்பு மையத்துக்கும் சென்ற அவர், அங்கு காஷ்மீர் படகு வீடு உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களைச் சந்த்துப் பேசினார். அடுத்ததாக, வடக்கு காஷ்மீரில் உள்ள பாராமுல்லா நகருக்கு அவர் திங்கள்
கிழமை செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com