மனித உரிமைகளை மீறுவதால் பாகிஸ்தான் உடைந்து சிதறும்: ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் அரங்கேறி வருவதன் காரணமாக  அந்நாடு தானாகவே உடைந்து சிதறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்தார்.
©Lôo Uô¨Xm, Tôh]ô SL¬p Tô_L ¨Lrf£«p Oô«tßd¡ZûU úT£V TôÕLôl×j Õû AûUfNo WôwSôj £e.
©Lôo Uô¨Xm, Tôh]ô SL¬p Tô_L ¨Lrf£«p Oô«tßd¡ZûU úT£V TôÕLôl×j Õû AûUfNo WôwSôj £e.

பாகிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் அரங்கேறி வருவதன் காரணமாக அந்நாடு தானாகவே உடைந்து சிதறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்தார்.

பிகார்  மாநிலம், பாட்னாவில் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

ஜம்மு}காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு புற்றுநோய் போல் இருந்தது. ஜம்மு}காஷ்மீரில் உள்ள நான்கில் 3 பகுதியினர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு ஆதரவாக உள்ளனர். ஜம்மு}காஷ்மீருக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்.

ஜம்மு}காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசியல் சட்டப் பிரிவு 370 நீக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருந்தது. அதன்படி, அந்த வாக்குறுதியை நிறைவேற்றினோம்.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் ஜம்மு}காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கு பாஜகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

5 ஆண்டுகளுக்குள் ஜம்மு}காஷ்மீர் மாறிவிடும். ஜம்மு}காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம். இதில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது.

அந்நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால், முதலில் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும்.இந்தியா}பாகிஸ்தான் இடையே 1965, 1971}இல் போர் நட

ந்தது. அவற்றில் இந்தியாவே வெற்றி பெற்றது. மீண்டும் பாகிஸ்தான் போருக்கான சூழலை ஏற்படுத்தி வருகிறது.

இந்த முறை இந்தியா எதுவும் செய்யத் தேவையில்லை. ஆனால், மனித உரிமை மீறல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதால், அந்நாடு தானாகவே உடைந்து சிதறிவிடும்.

பலூசிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் நடப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பாகிஸ்தான் தவறான பாதையை தேர்வு செய்து செல்கிறது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது. ஜம்மு}காஷ்மீரின் வளர்ச்சி இதனால் பாதிக்கப்படுகிறது. 

எத்தனை பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பினாலும், அவர்கள் உயிருடன் திரும்பிச் செல்ல மாட்டார்கள் என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும்  என்றார் ராஜ்நாத் சிங்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், நித்யானந்த் ராய், பிகார் துணை முதல்வர் ஷில் குமார் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜம்மு}காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிகாரில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் வெளிநடப்பு செய்தது.

பிகார் மாநிலம், பாட்னா நகரில் பாஜக நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com