வெங்காயம் விலை கிலோ ரூ.80-ஆக அதிகரிப்பு

சந்தைகளில் வரத்து குறைந்து போனதையடுத்து, தேசிய தலைநகர் தில்லி உள்பட சில இடங்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.70-80-ஆக அதிகரித்துள்ளது.
வெங்காயம் விலை கிலோ ரூ.80-ஆக அதிகரிப்பு

சந்தைகளில் வரத்து குறைந்து போனதையடுத்து, தேசிய தலைநகர் தில்லி உள்பட சில இடங்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.70-80-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களில் ஏற்பட்ட மித மிஞ்சிய மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு சந்தைகளில் அதன் வரத்து குறைந்து போயுள்ளது. 

நுகர்வோர் அமைச்சக புள்ளிவிவரப்படி, கடந்த வாரம் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை தில்லியில் ரூ.57-ஆகவும், மும்பையில் ரூ.56ஆகவும், கொல்கத்தாவில் ரூ.48-ஆகவும், சென்னையில் ரூ.34 ஆகவும் இருந்தது. இதே கால அளவில், குர்கான் மற்றும் ஜம்மு சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.60-ஆக காணப்பட்டது. 

இந்த நிலையில், முந்தைய வாரத்தில்  சராசரியாக ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.50-60-ஆக இருந்த நிலையில், தற்போது வரத்து குறைந்து போனதால் தேசிய தலைநகர் தில்லி மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.70-80-ஆக கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

உள்நாட்டு சந்தைகளில் வரத்தை அதிகரிக்கவும், வெங்காயத்தின் விலை மேலும் உயர்வதை கட்டுக்குள் வைக்கவும் மத்திய அரசு கடந்த சில வாரங்களாகவே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சில்லறை விற்பனையில் கடந்த 2-3 நாட்களாகவே வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதற்கு, மழையால் பயிர் சேதமடைந்து உற்பத்தி குறைந்து போனதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இது ஒரு குறுகிய கால விநியோக சீர்குலைவு, அடுத்த 2-3 நாட்களில் நிலைமை சீரடையாவிட்டால் வெங்காயத்தின் மேலும் அதிகரிக்கும். 

எனவே, வர்த்தகர்கள் வெங்காயத்தை இருப்பு வைக்கும் அளவில்   கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்ககூடும் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com