நீதி வழங்குவதில் அவசரமும் கூடாது; தாமதமும் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.போப்டே

"நீதி வழங்கப்படுவதில் தேவையற்ற அவசரமும் கூடாது;  காலதாமதமும் செய்யப்படக் கூடாது' என்று உச்ச நீதிமன்ற எஸ்.ஏ.போப்டே தெரிவித்தார்.
நீதி வழங்குவதில் அவசரமும் கூடாது; தாமதமும் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.போப்டே

"நீதி வழங்கப்படுவதில் தேவையற்ற அவசரமும் கூடாது;  காலதாமதமும் செய்யப்படக் கூடாது' என்று உச்ச நீதிமன்ற எஸ்.ஏ.போப்டே தெரிவித்தார்.
அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இந்திய நீதித்துறை சந்திக்கும் சவால்கள் என்ற தலைப்பிலான மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், குவாஹாட்டி உயர்நீதிமன்ற தற்காலிகத் தலைமை நீதிபதி அரூப்குமார் கோஸ்வாமி, ஓய்வு பெற்ற மற்றும் தற்போதைய நீதிபதிகள் பலரும் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.போப்டே பேசியதாவது:
உடனடி நீதி எனப்படும் நடைமுறை உலகின் மோசமான நீதிபரிபாலன நடைமுறையாகும். ஆனால் நீதி வழங்கப்படுவதில் காலதாமதமும் செய்யப்படக் கூடாது. தாமதிக்கப்படும் நீதியை யாருமே விரும்புவதில்லை. ஆனால் நீதி வழங்குவதற்கு நேரமாகிறது. இதை சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டில் தற்போது நீதிபதி-மக்கள்தொகை விகிதம் என்பது 10 லட்சம் பேருக்கு 20 நீதிபதிகள் என்பதாக உள்ளது. இது மிகவும் குறைவாகும். பல்வேறு நாடுகளில் இது 10 லட்சம் பேருக்கு 50 முதல் 80 நீதிபதிகள் என்பதாக உள்ளது. நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகளுடன் ஒப்பிடும்போது நீதிபதிகளின் விகிதம் என்ன என்பது மற்றொரு கோணமாகும். அதையும் பரிசீலிக்க வேண்டும்.
நீதிபதிகளும் சமூக வலைதளங்களைப் பார்வையிட வேண்டும். ஆனால் அவர்கள் அவற்றில் பதிவுகளைப் போடுவது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. நாம் மக்களுக்காகப் பணியாற்றுகிறோம் என்பதால் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து அறிந்து கொள்வது முக்கியம் என்றார் போப்டே.
நீதித்துறையின் மீது சமூக வலைதளங்களின் தாக்கம் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. எனினும், சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இது தவிர, வழக்குரைஞர் சங்கத்துக்கும் நீதிபதிகளுக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்துவது, நீதிமன்ற விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்புவது உள்ளிட்ட நீதித்துறை சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும் இந்த நாட்டில் விவாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com